Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த எம்எல்ஏ-வைத் தவிர மற்றவர்கள் பணம் வாங்கியது உண்மையே! அடித்துச்சொல்லும் சீமான்

'குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பின், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வரும்' என 'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சீமான்

2008ஆம் ஆண்டு, ராமேஸ்வரத்தில் திரையுலகின் சார்பில் நடந்த கூட்டத்தில், இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அமீர் ஆகியோர்மீது வழக்குத் தொடரப்பட்டது.  அந்த வழக்கு,  ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான், அமீர் உள்ளிட்டோர் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு, ஆளுநர் ஆட்சி வரும் சூழலும் உள்ளது. தற்போது தமிழகத்தை பி.ஜே.பி மறைமுகமாக ஆட்சி செய்துவருகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாட்டு இறைச்சிக்கு எதிரான தடையை எதிர்த்துப் போராடிய மாணவர் சூரஜ்மீது தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை இல்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் மறுக்கப்படுகிறது. கதிராமங்களத்திலும் நெடுவாசலிலும் மக்கள் நடத்தும் போராட்டங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

அமைச்சர்கள் பேசவேண்டியதை எல்லாம் ஹெச்.ராஜா பேசிக்கொண்டிருக்கிறார். அ.தி.மு.க கட்சியால் பிரச்னை இல்லை. கட்சிக்குள்ளேதான் பிரச்னை. அதன் காரணமாகவே இந்தப் பண விவகாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த விவகாரத்தை வெளியிட்ட எம்எல்ஏ எவ்வளவு வாங்கினார் எனக் கூற வேண்டும். அவர் கூறிய குற்றச்சாட்டுகுறித்து தமீம் அன்சாரியிடம் விசாரித்தேன். அவர், நான் பணம் பெறவில்லை எனக் கூறிவிட்டார். எனவே, அவர் நிச்சயம் பணம் வாங்கியிருக்க மாட்டார். மற்றவர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கவில்லை. எனவே, அவர்கள் பணம் பெற்றது உண்மை என்றே நினைக்கிறேன். இது மக்களுக்கும் தெரியும். ஆனாலும் இந்தச் செயலுக்கு எதிராக புரட்சி வெடித்துவிடப்போவதில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால், கொள்ளையடித்து சொத்து சேர்த்த கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மீண்டும் மக்கள் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்" எனக் கூறினார்.

பேட்டியின்போது இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குமரன், ராஜூ, இலக்கியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close