Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி பாய்ந்தோடும் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் - குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த பிடாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குளத்துப்பாளையம் காமராஜ் நகரில் முறையாகக் குடிநீர் வழங்காததால், பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

kauvery

 

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் குளத்துப்பாளையம் காமராஜ் நகரில், கடந்த மூன்று மாதங்களாகக் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டுவருகின்றனர். இதனால், அந்தப் பகுதி மக்கள் பக்கத்து கிராமமான பிடாரமங்கலத்துக்குப் பயணம்செய்து, பைக், சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் தேவையான தண்ணீரை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், அவர்கள் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காட்டுப்புத்தூர், வளையப்பட்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் சாலைமறியலால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்த ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் சுபத்ரா, ஊராட்சி செயலர் முருகன் மற்றும் தொட்டியம் போலீஸார் , பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பரபரப்பு நிலவியது. இறுதியில், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க தற்காலிமாக மினி டேங்க் உடனடியாக அமைத்து தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். காவிரிக்கரையோரப் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் துவங்கியுள்ளது. வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் திருச்சி மாவட்டத்தில் அடிக்கடி சாலைமறியல்  தொடர்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close