Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாலை விபத்தைத் தடுக்க...  போலீஸ் வெளியிட்ட 'கானா' பாலா பாடல் சி.டி. !

                                      போலீஸ் வெளியிட்ட கானா பாடல் சி.டி....

சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை மாநகர போலீஸார் இன்று குறுந்தகடு ஒன்றை வெளியிட்டனர். பிரபல சினிமா பின்னணிப் பாடகர் 'கானா' பாலா எழுதிப் பாடியுள்ள விழிப்புஉணர்வுப் பாடல் இதில் இடம்பெற்றுள்ளது. பைக் ரேஸ், செல்போன் பேசியபடி பைக் ஓட்டுவது, போதையில் பயணம், ஹெல்மெட் அவசியம், சிக்னலை மதியாமை போன்ற அம்சங்களை வலியுறுத்தி ( பாடல் லிங்க் https://www.youtube.com/watch?v=b00BeZE3HEo&feature=youtu.be) பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்தக் குறுந்தகடு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. 'கானா' பாலா அதை வெளியிட... சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் அபய்குமார் சிங், சங்கர், இணை கமிஷனர்கள் அன்பு, பவானீஸ்வரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

சாலை விபத்துகள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவரும், சென்னை பூந்தமல்லி போக்குவரத்து வட்டார அலுவலருமான (ஆர்.டி.ஓ.) சி.நெடுமாறனிடம் இதுதொடர்பாகப் பேசினோம்.

ஆர்.டி.ஓ. முனைவர் சி.நெடுமாறன்"ஐந்து விதமான கை சிக்னல்கள் இருப்பது வாகன ஓட்டிகளில் 31 சதவிகிதம் பேருக்குத்தான் தெரிகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம்பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்; 4 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டேபோகிறது. விபத்து நடப்பதற்கு வாகன ஓட்டிகளே முக்கியக் காரணமாக (96 சதவிகிதம்) இருக்கிறார்கள். சிக்னலை மதிக்காமல் செல்வது, குறுக்கே சென்று தவறுதலாகச் சென்றுவிட்டுத் திரும்புவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது போன்றவை விபத்துக்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறையின் மத்திய அமைச்சரான நிதின் கட்கரி சில மாதங்களுக்கு முன்னர், 'இந்திய அளவில் சாலை விபத்தில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு. நகரங்கள் என்ற அளவில் மும்பைக்கு முதலிடம்' என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புஉணர்வு மக்களிடம் அதிகரித்தால்தான் விபத்துகளைக் கட்டுப்படுத்த முடியும். பள்ளிப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு சார்ந்த விழிப்பு உணர்வைப் பாடமாகப் பயிற்றுவித்துவந்தால், விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். உலக அளவில், ஸ்வீடன் நாட்டில்தான் சாலை விபத்துக் குறைவு. ஆண்டுக்கு ஒருமுறையே அங்கு விபத்து நடந்திருந்தாலும், அது எப்படி நடந்தது என்பதுகுறித்த நாட்டின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுவிடுகிறது. கூட்டத்தில், நாட்டின் முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து விவாதம்செய்து தீர்வு காண்கின்றனர்'' என்றார்.

விழிப்புஉணர்வை அதிகரிக்குமா அரசு?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close