Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் ஜனாதிபதி பிரணாப்..!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று காஞ்சிபுரத்துக்கு வருகைதந்தார். தலைநகர் டெல்லியிலிருந்து தனி விமானம்மூலம் அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்துக்குப் பிரணாப் வந்தார். அங்கிருந்து கார் மூலம் காஞ்சிபுரம் சென்றார். பிரணாப்பின் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


காஞ்சி சென்ற பிரணாப், அங்கு காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு அவருக்குப் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. தரிசனைத்தை முடித்துக்கொண்டு, காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்றார். அங்கு, அவர் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரைச் சந்தித்து ஆசிபெற்றார். பின்னர், அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

பிரணாப், கடந்த மாதம் தமிழகம் வந்தபோதே, காஞ்சிபுரம் செல்ல திட்டமிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close