Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சித்த மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அறிவித்தது ஏன் ? - மத்திய அமைச்சர் திருச்சியில் விளக்கம்

சித்த மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வு அறிவித்தது ஏன் ? - மத்திய அமைச்சர் திருச்சியில் விளக்கம்

 

ஸ்ரீபத் யசோ நாயக்மத்திய ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இன்று திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சுவஜ் பாரத் மிஷின் திட்டம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த, அந்தத் இடத்தை தூய்மைப் படுத்தினார்.

இதனையடுத்து திருச்சி சங்கம் ஹோட்டலில்  பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் ,“தமிழகத்தில் தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 இடங்களில் சித்தா, யுனானி, ஆயுர்வேத சிகிச்சை  முறைகளை அளிக்கும் ஆயுஷ் மருத்துவமனை கட்ட அனுமதி வழங்கி யுள்ளோம். முதலில், 50 படுக்கைகள்கொண்ட இந்த மருத்துவமனைகளுக்கு, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

சென்னையில் இயங்கிவரும் டாக்டர். அச்சந்தா லட்சுமிபதி ஆயுர்வேத ஆராய்ச்சி மையம், 1965 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த மையம், 50 ஏக்கர் நிலத்தில் மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

 

மேலும், 2018 ஆம் ஆண்டிலிருந்து சித்தா, யுனானி, ஆயுர்வேதம் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என அறிவித்ததுகுறித்து கேட்டபோது, "கடந்த ஆண்டு சித்தா, யுனானி, ஆயுர்வேத படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கிடவே நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இயங்கும் சித்த மருத்துவக்கல்லூரியைப் போல கூடுதலாக சித்தமருத்துவக்கல்லூரிகள் துவங்கும் எண்ணமில்லை. மாநில அரசாங்கம் முடிவெடுத்தால் நிச்சயம் அனுமதி வழங்குவோம்.

 

உலக யோகா தினத்தை முன்னிட்டு, நாடுமுழுவதும் வரும் 31 ஆம் தேதி விழா நடைபெறும். இந்த வருடம் லக்னோவில் மிகப் பிரமாண்ட முறையில் யோகா விழா நடக்க உள்ளது" என்றார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close