Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

லங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, அந்நாட்டில் உள்ள தமிழக மீனவர்களின் 135 படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், " 2015 ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 61 மீன்பிடிப் படகுகள், 2016 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட 53 மீன்பிடிப் படகுகள், நடப்பு ஆண்டில் பிடிக்கப்பட்ட 21 மீன்பிடிப் படகுகள், ஆக மொத்தம் 135 படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளன.

'தமிழக மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளைக் கைப்பற்றி, அவற்றை மீண்டும் தரக்கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுத்துள்ளது. கைதுசெய்யப்படும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையிலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் இலங்கை அரசால் திருப்பித் தரப்படவில்லை. அந்த மீன்பிடிப் படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் புதுப்பிக்கப்பட்டு, தமிழக மீனவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதே கோரிக்கையை ஏற்கெனவே உங்களுக்கு வைத்துள்ளேன்'.

தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் ஆபத்தான நிலையில் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பதையும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மழைக்காலம் வரும் நிலையில், அவை நீண்டநாள்கள் உபயோகப்படுத்தப்படாமல் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், மிகவும் பாதிப்படையும் அபாயம் உள்ளது. அந்தப் படகுகளை விடுவிப்பதுகுறித்து இலங்கை அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.

எனவே, இந்தப் பிரச்னையை இலங்கை அரசின் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று, 135 படகுகளையும், இன்னமும் இலங்கைச் சிறையில் இருக்கும் 11 மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close