Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதிரொலித்தது அ.தி.மு.க எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம்! சட்டப்பேரவையில் தி.மு.க அமளி

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தி.மு.கவினர் அமளியில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
 

தமிழகம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சபாநாயகர் தனபால் முன்னிலையில் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மசோதாவும் இன்று நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், 'ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் எம்எல்ஏ., சரவணன், கூவத்தூரில் பேரம் பேசப்பட்டதாக கூறிய சமீபத்திய வீடியோ' குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், இவ்விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். இதையடுத்து தி.மு.கவினர் கூச்சலிடத் தொடங்கினர். இதனால் பேரவையில் பதற்றமான சூழல் உருவாகியது.

இதனிடையே தகுந்த ஆதாரங்களைத் தந்தால், இவ்விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படும். மேலும் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளை வைத்து விவாதம் நடத்த முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close