Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூண்டோடு வெளியேற்றம்! மறியல்செய்த மு.க.ஸ்டாலின் கைது!

தமிழக சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடன் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் அமளியால், சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தற்போது, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்!

stalin

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், 'ஓ.பி.எஸ் அணியிலிருக்கும் எம்எல்ஏ சரவணன், கூவத்தூரில் பேரம் பேசப்பட்டதாகக் கூறிய சமீபத்திய வீடியோ' குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரம்குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். 

இதையடுத்து, தி.மு.க-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் தி.மு.க உறுப்பினர்கள் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்தார். தி.மு.க-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரையும் பேரவையை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார் தனபால். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் பேரவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகம் எதிரே உள்ள ராஜாஜி சாலையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம் எல் ஏ-க்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைதுசெய்து வேனில் அழைத்துச்சென்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close