Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எம்எல்ஏ-க்கள் விற்பனைக்கு'- பதாகைகளுடன் சட்டப்பேரவையை அதிரவைத்த தி.மு.க எம்எல்ஏ-க்கள்

மு.க.ஸ்டாலின்

'எம்எல்ஏ-க்கள் விற்பனைக்கு' என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அவர்களுக்கு, சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போது, திமுக உறுப்பினர்கள் தெர்மாகோல் தெர்மாகோல் என்று கூச்சலிட்டுக் கலாய்த்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆளும்கட்சி எம்எல்ஏ சரவணன் வீடியோகுறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதற்கு சபாநாயகர் தனபால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். இதைக் கண்டித்து, தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, "எம்எல்ஏ-க்கள் விற்பனைக்கு" என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் தி.மு.க உறுப்பினர்கள் கூச்சலில் ஈடுபட்டனர். மேலும், ஜனநாயகத்தை விற்காதே என முழக்கம் எழுப்பியும், ரூபாய் நோட்டுகளை உயர்த்திப் பிடித்தபடியும் தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

திமுக

அப்போது, தி.மு.க உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி சபாநாயகர் தனபால் கேட்டுக்கொண்டதோடு, கூவத்தூர் வீடியோ தொடர்பாக உரிய ஆவணங்களைத் தாக்கல்செய்தால், பேச அனுமதி அளிக்கப்படும் என்றும்,  நீரா ராடியா டேப் விவகாரம் பற்றிப் பேச தி.மு.க அரசு அப்போது அனுமதிக்கவில்லை என்றும் கூறினார். மேலும், அவையைத் தொடர்ந்து நடத்த தி.மு.க உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தொடர் அமளியில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் எச்சரித்தனர்.

திடீரென எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், வழக்குத் தொடர்ந்த நிலையில் பேரவையில் விவாதிக்க கேள்வி எழுப்புவது சரியா எனக் கேள்வி எழுப்பியதோடு, சட்டப்பேரவை நடைபெறக்கூடாது எனத் தி.மு.க-வினர் செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close