Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4 லட்சத்தை நெருங்கும் பிரமாணப் பத்திரங்கள்... தேர்தல் ஆணையத்தைத் தெறிக்கவிடும் சசிகலா அணி!

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில், சசிகலா அணி சார்பில் 47,151 பிரமாணப் பத்திரங்கள் இன்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இரட்டை இலை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைச் சந்தித்ததால், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து, சசிகலா தரப்பு அ.தி.மு.க அம்மா அணி என்றும், ஓ.பி.எஸ் தரப்பு அ.தி.மு.க புரட்சித்தலைவி அணி என்றும் பிரிந்து, தேர்தலைச் சந்தித்தனர். இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற இரு அணிகளையும் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று, சசிகலா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் 47,151 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்செய்யப்பட்டன. இதுவரை சசிகலா தரப்பில் 3,98,632 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஓ.பி.எஸ் தரப்பிலும் லாரி மற்றும் டெம்போ வண்டிகளில் பிரமாணப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. பிரமாணப் பத்திரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அணிக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close