Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க விரைவான நடவடிக்கை தேவை: உயர் நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டம், நவநீத கிருஷ்ணபுரம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவிவருவதாகவும், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க மருத்துவத்துறைக்கு உத்தரவிடக்கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  டெங்கு பாதிப்பினால் அவருடைய மனைவி பூத்தாய் இறந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார் . 

madurai high court
 

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் ஆதிநாதன் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 12 பேர் காய்ச்சலினால் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு நபருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மனுதாரரின் மனைவி டெங்குவினால் இறக்கவில்லை எனும் மருத்துவச் சான்றிதழையும் அரசு தரப்பினர் சமர்ப்பித்தனர்.  

விசாரணையின் முடிவில், மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close