Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘விவேக’த்தை வாங்கியது சோனி மியூசிக்!

இது, அஜித் சினிமாவுக்கு வந்த 25வது வருடம். அதனால் ‘விவேக’த்துக்கு அவரின் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயின். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய அஜித்தின் முந்தையப் படங்களை இயக்கிய சிவா இந்தப்படத்தை இயக்குகிறார். ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

விவேகம் 

இந்தப்படத்தின் இசைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் அனிருத். அஜித்தின் முந்தைய படமான ‘வேதாள’த்துக்கும் இசையமைத்தது இவர்தான். அதில் வந்த ‘ஆளுமா டோலுமா...’ மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றுசேர்ந்த பாடல். அதனால் அஜித்-அனிருத் இணைக்கு ‘விவேக’த்திலும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் சுப்ரமணியம் கூறுகையில், ‘இது அஜித்துடன் எங்களுக்கு ஆறாவது படம். முந்தைய சாதனைகளை விவேகம் முறியடிக்கும்’ என்றார். இந்தப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close