Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலியல் சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளை சர்வதேச நிகழ்வில் பேசும் முதல் தமிழர்

கோபி சங்கர்

 

பாலியல் சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளை சர்வதேச நிகழ்வில் பாலியல் உரிமைப் போராளி மதுரை கோபி முதன்முறையாகப் பேசுகிறார்.

சர்வதேச அளவில் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் என்ற இடத்தில் வேர்ல்டு பிரைடு 2017 விழா நடக்கிறது. பாலியல் சிறுபான்மையினர் சர்வதேச அளவில் சந்திக்கும் உரிமைப் பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. 14 நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் முன்னிலையில் பாலியல் சிறுபான்மையினருக்கான உரிமைகள் குறித்து வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடக்க உள்ள விழாவில் கோபி பேசவுள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் முதல் தமிழரும் இவரே. கோபி ஒரு இன்டர் செக்ஸ் பர்சன் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட பல்வேறு விதமான பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். மதுரையில் இதற்காக சிருஷ்டி என்ற அமைப்பை நடத்தி வரும் கோபி, தமிழக தடகள வீராங்கனை சாந்தி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாலியல் ரீதியான சர்ச்சையால் வெற்றி வாய்ப்பை இழந்ததிலிருந்து அவர் தமிழக அரசிடம் தடகள பயிற்சியாளராக வேலை வாய்ப்பு பெற்றது வரை அவருக்கு உறுதுணையாக இருந்து கோபி தொடர்ந்து போராடி வருகிறார். இந்திய அளவில் பாலியல் சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து சர்வதேச அளவில் ஸ்பெயினில் நடக்கும் விழாவில் பேச உள்ளதாகக் கூறும் கோபியை வாழ்த்தி வழியனுப்புவோம். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close