Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சுமுக நிலை திரும்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 


மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு தடைவிதித்ததற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே சென்னை ஐ.ஐ.டியிலிலும் மாட்டுக்கறி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த விழாவை ஏற்பாடு செய்த ஆய்வு மாணவர் சூரஜை வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக தாக்கினர். அப்போது ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐ.ஐ.டி வளாக்கத்துக்கு முன்னர் முற்போக்கு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் ஐ.ஐ.டியில் ஒரு அமைதியற்ற சூழல் நிலவியது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஐ.டி மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில். சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரி வேண்டும். ஐஐடி வளாகத்தில் சுமுக நிலை திரும்பும் வரை சூரஜை தாக்கிய மணிஷை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்போது ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு 800 மாணவர்களுக்கு இமெயில் அனுப்பி உள்ளோம். சம்பவம் தொடர்பாக மூத்த பேராசிரியர் தலைமையில் ஏற்கெனவே குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ஐ.ஐ.டியில் சுமுக நிலைமை திரும்புவதற்கு கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து  ஜூன் 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close