Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தினகரன் வீட்டுக்குத்தான் கெளம்புனேன்... ஆனா, பா.ஜ.க-ல சேர்ந்துட்டேன்'! - கலகல பொன்னம்பலம்

நடிகர் பொன்னம்பலம்

 

அ.தி.மு.கவில் இருந்து விலகி, பா.ஜ.கவின் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் பொன்னம்பலம். 'இரண்டு அணிகளும் இணையும் என்று இவ்வளவு நாள் காத்திருந்தேன். அவர்கள் இணைந்திருந்தால், நான் ஏன் பா.ஜ.க பக்கம் போகப் போகிறேன்' என்கிறார் நடிகர் பொன்னம்பலம். 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் மதில்மேல் பூனையாக உள்ளனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி.தினகரன் அணி, தீபா அணி என பிரிந்துள்ளனர் அ.தி.மு.க.வினர். 'கட்சியில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை' எனத் தொண்டர்களே புலம்பி வருகின்றனர். இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்து, நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்தில் இருந்த நடிகர் பொன்னம்பலம், இன்று பா.ஜ.வில் இணைந்தார். 

பொன்னம்பலத்திடம் பேசினோம். 
  
அ.தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்?

" காரணம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகமே இடி விழுந்ததுபோல இருக்கிறது. அ.தி.மு.க.வில் இரண்டு அணியினரும் ஒன்றாக சேருவார்கள் என்று இதுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை. இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் குறை சொல்லிப் பேசி வருகின்றனர். ஊரில் எந்த நல்ல செய்தியும் இல்லை. யோசனை செய்து கொண்டே இருந்தேன். மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இரண்டு அணிகள் சேர்ந்தால் நான் ஏன் பா.ஜ.க பக்கம் போகப் போகிறேன்? விடைத்தெரியாமல்தான் இங்கு வந்துள்ளேன். பா.ஜ.க. கொடுக்கும் கடமையை சரியாக செய்வேன்". 

 பா.ஜ.கவில் சேர்ந்தவுடன் உங்களுக்கு முதலில் வாழ்த்து சொன்னது யார்?

" முதலில் வாழ்த்துச் சொன்னது என்னுடைய மனைவி தேவிதான். 'ஜெயலலிதா மறைந்தபிறகு இப்போதுதான் நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள்' என்று சொன்னார். அவருக்கு அரசியலே தெரியாது. அடுத்து நண்பர்கள். அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்". 

அ.தி.மு.க.வை விமர்சிப்பீர்களா?

" அம்மா கொடுத்த மரியாதை இப்போது அங்கு இல்லை. என்னைப் போல பலர் இதே நிலைமையில்தான் உள்ளனர். நான் ஒன்றும் வெளிநாட்டு கட்சியில் சேரவில்லை. இந்திய மக்கள் ஏற்றுக் கொண்ட பா.ஜ.கவில்தான் சேர்ந்தேன். அ.தி.மு.க.வை விமர்சிக்க மாட்டேன். அது முறையல்ல. 2011 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் செயல்பட்டு வந்தேன். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை என்னைப் போன்றவர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது".

பா.ஜ.விலிருந்து எதுவும் அழைப்பு வந்ததா?

"யாரும் என்னை அழைக்கவில்லை. இன்று காலையில்கூட, 'தினகரனைச் சந்திக்கலாம்' என்றுதான் இருந்தேன். மனம் மாறியதால் பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டேன். கூவத்தூரில் எம்எல்ஏ-க்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக மக்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை. பணம் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. 

 தமிழக அரசு எப்படி செயல்படுகிறது?

" மக்கள் குறித்து கவலைப்படாமல் எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். முதலிலேயே பைட் சீன் வைத்தால் எப்படி? சட்டசபையை அமைதியாக நடத்தி மக்கள் நலனில் அக்கறை செலுத்தவேண்டும். தமிழகமே இருட்டில் இருக்கிறது. நடிகர் ஆனந்தராஜ் தொடக்கத்திலேயே வெளிப்படையாகப் பேசிவிட்டார். 

பா.ஜ.க.வின் தலையீடு அ.தி.மு.க.வில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
 
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இவர்கள் ஒழுங்காக இருந்தால் பிரச்னையே இல்லை. மத்திய அரசு, எல்லா மாநிலங்களைப் போலத்தான் தமிழகத்தையும் பார்க்கிறது. நாடு நன்றாக இருக்க வேண்டும்". 

 ஜெயலலிதாவின் மரணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

"அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாள்களில், இரட்டை இலையை அவர் காண்பித்திருந்தால் இந்தளவுக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்காது. என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பதைப் பற்றியும் அவர்கள் சொல்லவில்லை. படம் ஆரம்பத்திலிருந்து வணக்கம் போடும் வரை இருட்டாகவே காட்டிவிட்டனர் என்பதுதான் வருத்தம். ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க நான் என்ன சி.பி.சி.ஐ.டியா?   

 தீபாவும் தீபக்குக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்காகச் சண்டைப்போடுகிறார்களே?

" ஜெயலலிதா உயிரோடு இருந்த காலக்கட்டத்தில் அவர்கள் எதுவும் பேசவில்லை. இப்போது, போயஸ் கார்டனுக்காக சண்டைபோடுகிறார்கள். சொத்துக்கு ஆசைப்பட்டு வந்தார்களா அல்லது பாசத்தில் வந்தார்களா என்று தெரியவில்லை.போயஸ் கார்டன் பத்திரத்தை முதலில் மக்களிடம் காட்டுங்கள்".
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close