Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“நெடுவாசல் திட்டத்தை நிறுத்தவேண்டும்” - சட்டமன்றத் தீர்மானம் கோரும் போராட்டக்குழு

நெடுவாசல் மீட்புக்குழு

நெடுவாசல் மீட்புக் குழுவினர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ''நெடுவாசல் கிராமத்தில், மத்திய அரசு 'ஹைட்ரோ- கார்பன் திட்டத்தை' கொண்டுவரவிருக்கிறது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும்'' என்று வலியுறுத்தினர். 

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நெடுவாசல், வடகாடு, வாணக்கன் காடு, நல்லாண்டார் கொல்லை, கருக்காகுறிச்சி, அணவயல், புல்லான்விடுதி ஆகிய சுற்றுப்புறக் கிராமங்களைச் சார்ந்த 'நெடுவாசல் மீட்புக் குழு'வினர் கலந்துகொண்டனர்.  மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் பேசியபோது,''பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை அறிவித்தது. அதை எதிர்க்கும் வகையில், பிப்ரவரி 16 ஆம் தேதி முதற்கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில், மொத்தம் 31 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அறிவித்த நாளிலிருந்தே, 'இத்திட்டம் வேண்டாம்' எனப் பெருந்திரள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 22 நாள்கள் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய - மாநில அரசுகள் திட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைத்தது. இதையடுத்து போராட்டங்களும் நிறுத்திவைக்கப்பட்டன.

இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்தபோது 'திட்டம் செயல்படுத்தப்படாது' என உத்திரவாதம் அளித்தனர். ஆனால், மத்திய அமைச்சர்களைச் சந்தித்த சில நாள்களிலேயே திட்டத்தின் ஒப்பந்தத்தை அமல்படுத்தினர். அமல்படுத்தப்பட்ட பிறகும்கூட 'இந்தத் திட்டம் நிராகரிக்கப்படும்' என உறுதி அளித்தனர். அதனால், எங்கள் போராட்டங்கள் கைவிடப்பட்டன. ஆனால், அதன் பிறகு ஹைட்ரோ-கார்பன் திட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், மீண்டும் ஏப்ரல் 12 ஆம் தேதி இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது 64-வது நாளாக இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டசபை கூடும் காரணத்தால், மாநில அரசு 'நெடுவாசல் ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை நிறுத்துவதற்கான - தடை செய்வதற்கான முழுமையானத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என மீட்புக் குழுவின் சார்பாகவும் நெடுவாசல் மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நெடுவாசல், வடகாடு உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இத்திட்டத்தினால் பாதிக்கப்படும். நெல், காய்கறி, நவதானியங்கள்,பணப்பயிர்கள் என அனைத்து வகையான பயிர்களும் விளையும் பொன் விளையுற பூமி நெடுவாசல். அதை அதன் தன்மை இழந்து அழிய விடக்கூடாது. இந்தப் போராட்டம் தொடங்கியது முதல் இளைஞர்கள் உதவிகொண்டு இருக்கும் நிலையில், மீண்டும் இளைஞர்களின் பெருந்திரளாகப் போராட்டத்தில் பங்கெடுக்கும் சூழலை மாநில அரசு ஏற்படுத்திவிடக் கூடாது'' என்ற  எச்சரிக்கையோடு பேசிமுடித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close