Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிருஷ்ணகிரியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம்..!

ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் அதன் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல் துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதமாதம் 7 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தி்ல் உள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் உள்ளது போல் இல்லாமல், காலதாமதமாக வழங்குவதைக் கண்டித்தும் இதுவரை ஒப்பந்த பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்காத பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.  

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலைத் தொடர்புத்துறை ஊழியர் சங்க கிளைத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் பாபு, மாவட்ட உதவித் தலைவர் அழகிரிசாமி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close