Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணி நிரந்தரத்துக்காகப் போராடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள்! சென்னை மாநகராட்சியில் போராட்டம்

சென்னை மாநகராட்சியில், கான்ட்ராக்ட், தற்காலிகமாக பணியாற்றி வரும் 15 ஆயிரம் தொழிலாளர்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சியில் வேலைசெய்துவரும் சுமார் 15 ஆயிரம் கான்ட்ராக்ட் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி நேற்றிலிருந்து (14.06.2017) போராடிவருகிறார்கள். சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், என்.எம்.ஆர். தொழிலாளியாகப்  பணியாற்றிய 908 தொழிலாளர்கள் மற்றும் மாநகராட்சியில் துப்புரவு, சுகாதாரம் உள்ளிட்ட பல வேலைகளில் கடந்த 20 ஆண்டு காலமாக தற்காலிக, கான்ட்ராக்ட் தொழிலாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். ஏற்கெனவே ஒரு பகுதியினர், நிரந்தரமாக்கப்படாமலேயே ஓய்வுபெற்ற அவலமும் நிகழ்ந்துள்ளது.

மாநகராட்சி விதிப்படி 250 வீடுகளுக்கு ஒரு சுகாதாரத் தொழிலாளியும், 250 வீடுகளுக்கு ஒரு குப்பை எடுக்கும் தொழிலாளியும் மற்றும் 500 மீட்டருக்கு ஒரு துப்புரவுத் தொழிலாளி என்ற எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட வேண்டும். மாநகராட்சி விதிப்படி, தற்போது வேலையில் உள்ள தொழிலாளர்களைவிட பல மடங்கு வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும். ஆனால், தற்போது பணியில் உள்ள 21 ஆயிரம் பேரில் 15 ஆயிரம் பேர் தற்காலிக, கான்ட்ராக்ட் தொழிலாளர்களாக கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார்கள்.

சிஐடியூ-வுடன் இணைக்கப்பட்ட சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம், பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடமும் அரசிடமும் முறையிட்டும், செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்துவிட்டார்கள். தனியார் நிறுவனங்களைப் போல அல்லாமல், முன்மாதிரியாக இருக்கவேண்டிய அரசு நிர்வாகம், 20 ஆண்டு காலமாக வேலை செய்துவருபவர்களை நிரந்தரமாக்காதது சட்டத்துக்கும், நியதிக்கும் விரோதமானது. மாநில அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் போராடும் தொழிற்சங்க பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, சங்கம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளைப் பரிசீலித்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close