Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அடுத்த ஆறு நாள்களுக்குள் அ.தி.மு.க.வில் அதிரடி!’ - நோன்பு திறப்புக்கு வருவாரா டி.டி.வி.தினகரன்? #VikatanExclusive

'அ.தி.மு.க-வில், அடுத்த ஆறு நாள்களுக்குள் நல்லது நடக்கும்' என்று ஆரூடம் சொல்கின்றன, கட்சியின் உள்வட்டாரங்கள். இதற்கு முன்னோட்டமாக அ.தி.மு.க. சார்பில், வரும் 21ஆம் தேதி நடக்கும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்படும். வரும் 21 ஆம் தேதி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி உதயமாகியுள்ளது. இது தவிர, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என அணிகள் உருவாகி, அ.தி.மு.க. பிளவுபட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வரும் 21 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் அழைப்பு விடுக்க கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அந்த நிர்வாகி, 'இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு நிச்சயமாக நீங்கள் வர வேண்டும்' என்று கூறியுள்ளார். அதற்கு டி.டி.வி.தினகரன், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவாரே' என்று கேட்டதற்கு, பதில் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார் அந்த நிர்வாகி. இதன் பிறகு டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஒரு தரப்பினர், 'நாமும் நிகழ்ச்சிக்குப் போகலாம்' என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால், டி.டி.வி.தினகரன் எந்த முடிவும் சொல்லவில்லை. இதற்கிடையில், அமைச்சர் ஒருவர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த முடிவின்படி, அடுத்த ஆறு நாள்களுக்குள் அ.தி.மு.க-வில் டி.டி.வி.தினகரன் தரப்பினரின் அதிரடிகள் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது" என்றார்.

 டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், "அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக இன்னும் டி.டி.வி.தினகரன் முடிவெடுக்கவில்லை. அதற்குள், சசிகலாவிடமிருந்து சில முக்கிய அசைமென்ட்டுகள் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மன்னார்குடியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரும், அவரது மகனும் சசிகலாவைச் சந்திக்க பெங்களூருக்குச் சென்றுள்ளனர். அவர்களிடம் சொல்லப்படும் தகவலையடுத்தே அடுத்த முடிவு எடுக்கப்படும். தற்போது, டி.டி.வி.தினகரனை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்த ஆட்சியின் தலைவிதி, டி.டி.வி.தினகரன் கையில்தான் இருக்கிறது. அது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். மன்னார்குடியில் பொதுக்கூட்டத்தை நடத்த போலீஸார் தடைவிதித்தது டி.டி.வி.தினகரனுக்கு கடும் வருத்தம். இந்தத் தகவல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதே நிலைநீடித்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அதிர்ச்சி வைத்தியத்தை அவரால் சமாளிக்க முடியாது" என்றனர்.

டி.டி.வி.தினகரனை நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்ததே, சமரசத் தூது என்கின்றனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு. தினந்தோறும் எம்எல்ஏ-க்கள், கட்சியின் நிர்வாகிகள் டி.டி.வி.தினகரனைச் சந்தித்துவருவது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதுகிறார் முதல்வர். இதனால், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிமூலம் டி.டி.வி.தினகரனிடம் சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்றே அவருக்கு வேண்டப்பட்ட மூத்த நிர்வாகிமூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், டி.டி.வி.தினகரனிடமிருந்து எந்தப்பதிலும் இல்லை. இதனால், அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் முதல்வர் தரப்பினர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close