Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி: ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

வைகை ஆற்றை தூய்மைப்படுத்தவும் மாசுபடுத்துவோருக்குக் கடும் தண்டனைகள் வழங்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கு தொடர்பாக, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வைகை

கோப்புப்படம்

வருசநாட்டு மலைப் பகுதியில் உருவாகும் வைகை ஆறு, ராமநாதபுரம் வரை சுமார் 258 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. பெரியார் அணையிலிருந்து பெருமளவு தண்ணீர் வைகை ஆற்றுக்குக் கிடைக்கும் நிலையில், கோடை காலங்களில் வைகையின் நீர் மதுரையை வந்தடைவதில்லை. அரசின் பராமரிப்புக் குறைவால், வைகை ஆறு  பயன்படுத்த இயலாத அளவு மாசடைந்து காணப்படுகிறது. வைகை ஆற்று நீர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வரை பாய்ந்து, தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்து வந்தது. சுமார் 258 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரத்தை அடையும் நிலையில் 452-க்கும் அதிகமான பகுதிகளில் கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறது.

இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல்செய்திருந்தார். அதில், ‘தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி, குப்பைக் கழிவுகளை கொட்டுவோருக்கு கடும் தண்டனைகள் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் உத்தரவிட வேண்டும் " என மனு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர்கொண்ட அமர்வு, இது குறித்து பதில் மனு தாக்கல்செய்ய தமிழக பொதுப் பணிகள் மற்றும் நீராதாரத் துறையின் செயலர், நீராதார மேலாண்மைத் துறையின் தலைமைப் பொறியாளர் மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜுலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close