Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடை மூடல்... உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் பெண்களே போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

Chennai High court

இதனிடையே, கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றினாலும் மதுக்கடைகள் திறக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக பொன்னேரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடை அமைந்திருந்தாலே டாஸ்மாக் கடையைத் திறக்கலாம். டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம சபை சார்பில் தீர்மானம் நிறைவேற்றினால் அது செல்லாது. அதாவது உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கடை அமைந்திருந்தால், கிராம சபை தீர்மானம் தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close