Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோப்புகள் திருடியது யார்?  கேரள உயர்போலீஸ் அதிகாரிகள் மோதல்

து தி.மு.க. போலீஸ், அது அ.தி.மு.க. போலீஸ் என்று போலீஸாரைத் தரம்பிரித்து முத்திரை குத்தும் வேலை தமிழ்நாட்டில் கடந்த நாற்பதாண்டு காலமாக நடந்து வருகிறது. அரசியல் தெளிவுள்ள மாநிலம் என்று கணிக்கப்படும் கேரளாவிலும் அந்த முத்திரை குத்தும் வேலை இருப்பது இப்போதுதான் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. என்றளவில் மிக உயர்ந்த பதவியில் இருப்போரே அங்கு  சண்டை போட்டுக் கொள்ளும் நிலை அரசியல் மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது.

கேரள முதல்வராகக் கடந்தாண்டு பினராயி விஜயன் (சி.பி.எம்) பொறுப்புக்கு வந்தார். அதுவரை மாநில போலீஸ் டி.ஜி.பி. பதவியிலிருந்த டி.பி.சென்குமார் அந்தப் பொறுப்பிலிருந்து வேறு பணியிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். "சட்டக்கல்லூரி மாணவி ஜிஸா (கொச்சின்) கொலை வழக்கு, புட்டிங்கல் கோயில் (கொல்லம்) பட்டாசு வெடியில், 110 பேர் பலியான விவகாரம் போன்றவற்றில் டி.ஜி.பி சென்குமாரின் விசாரணைமுறை சரியில்லை. ஆகவே" என்று இந்தப் பணிமாற்றத்துக்குக் கேரள அரசு விளக்கம் கொடுத்தது. கேரள அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கே சென்குமார் போனார். கோர்ட் அவரைக் கைவிடவில்லை. கேரள அரசின் முறையற்ற போக்கைக் கண்டித்ததோடு மீண்டும் அதே பணியிடத்துக்குச் சென்குமாரை நியமிக்க உத்தரவும் போட்டது.

கடந்த மாதம் கேரள டி.ஜி.பி-யாகச் சென்குமார் மீண்டு(ம்) வந்தார். அதே நேரத்தில், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி-யாக தோமின் ஜெ தச்சன்கெரே என்ற அதிகாரியை அரசு நியமித்தது. ஆட்சியதிகாரம் தம் கையில் இருந்தால்... அரசு அதிகாரம் எப்படியும் வளையுமே... தமிழ்நாட்டில் போலீஸ் டி.ஜி.பி-யாக அசோக்குமார் இருந்தாலும், ஆலோசகர் என்ற பொறுப்பில் அவரைவிடக் கூடுதல் அதிகாரத்துடன் கே.ராமானுஜம் நியமிக்கப்பட்டிருந்ததைப் போன்ற கதைதான் கேரளாவிலும் நடந்துள்ளதாக ஐ.பி.எஸ்-கள் மத்தியில் இந்த விவகாரம் புகைகிறது.

கூடுதல் டி.ஜி.பி. தோமின் ஜெ தச்சன்கெரே மீது பல வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், கூடுதல் டி.ஜி.பி-யாக, இவரைக் கொண்டுவந்தது, டி.ஜி.பி சென்குமாருக்கு வைத்த 'செக்' என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இம்மாதக் கடைசியில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் டி.ஜி.பி சென்குமாருக்கு முதல் சிக்கல் சில நாள்களுக்கு முன்னர் ஏற்பட்டது. சென்குமார் அனுப்பிவைத்த ஆட்கள் தன்னைத் தாக்கியதாக மாநில தலைமைச் செயலாளரிடம், கூடுதல் டி.ஜி.பி. தச்சன்கெரே கொடுத்த மனுதான் சிக்கலுக்குக் காரணம். கூடுதல் டி.ஜி.பி. தச்சன்கெரே மனுமீதான விசாரணைக்குப் பதிலளித்த சென்குமார், "கூடுதல் டி.ஜி.பி. தச்சன்கெரேவின் வழக்கு விவரங்கள் அடங்கிய கோப்புகளை அவருடைய ஆள்கள், அரசுப் பாதுகாப்பிலிருந்து எடுத்துச்செல்ல முயன்றனர். அதைத் தடுக்கும் முயற்சிதான் அங்கே நடந்தது. தாக்குதல் ஏதும் நடக்கவில்லை'' என்று கூறியுள்ளார். இந்தளவில் விசாரணை இப்போது உள்ளது. அடுத்தடுத்த விசாரணைகள் இது தொடர்பாக நடக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவே இருந்தாலும், அவர்களுக்குச் சட்டம் - ஒழுங்கில் இருக்கும் ஞானம் அரசியலில் இருக்க வாய்ப்பில்லை. காக்கிகளுக்கு நடுவில் அரசியல் கலக்க ஆரம்பித்திருப்பது நாட்டுக்கும் நல்லதல்ல.
 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close