Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தெர்மகோல் அமைச்சரைக் குறிப்பிட்டு பணம் கேட்ட இணைப் பதிவாளர்!' - சாக்குவியாபாரி வாக்குமூலம்

 சாக்கு டெண்டர்

தெர்மகோல் அமைச்சர் பெயரைச் சொல்லி கூட்டுறவு உயரதிகாரி ஒருவர் கமிஷன் கேட்டதால் சாக்குகளை எடுக்கவில்லை என்று வியாபாரி ஒருவர் பரபரப்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 வைகைஆற்று நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மகோல் மூலம் அதை மூட முயன்று பிரபலமாகியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அமைச்சருக்குக் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று கூட்டுறவு உயரதிகாரி ஒருவர், பணம் கேட்ட விவகாரம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது.  வள்ளியூரில் உள்ள நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த 25.4.2017ல் சாக்கு டெண்டர் விடப்பட்டது. இதை முக்கூடலைச் சேர்ந்த ராஜேந்திரன் எடுத்துள்ளார். அமைச்சரின் பெயரைச் சொல்லி இணைப் பதிவாளர் கமிஷன் கேட்டதால் சாக்குகளை எடுக்கவில்லை என்று வியாபாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 வேல்முருகனஇதுகுறித்து நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் வேல்முருகனிடம் பேசினோம். "100 கிலோ சீனி சாக்கு 70 ரூபாய்க்கும் 50 கிலோ சீனி சாக்கு 17.10 ரூபாய்க்கும் 50 கிலோ அரிசி சாக்கு 11.30 ரூபாய்க்கும் 50 கிலோ பருப்பு சாக்கு 9 ரூபாய்க்கும் பிளாஸ்டிக் பை 3.70 ரூபாய்க்கும் டெண்டர் போனது. இதை முக்கூடலைச் சேர்ந்த ராஜேந்திரன் எடுத்தார். டெண்டருக்கு முன்பணமாக அவர், 50 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார். டெண்டர் எடுத்தப்பிறகும் அவர் சாக்குகளை எடுக்கவில்லை. டெண்டர் எடுத்து 40 நாள்களுக்குள் முழு பணத்தைச் செலுத்தவில்லை என்றால் டெண்டர் ரத்தாகிவிடும். அடுத்து மறுடெண்டர் விடப்படும். மற்றப்படி, மந்திரிக்கும் தலைவருக்கும் கமிஷன் கேட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது"என்றார். 

டெண்டர் எடுத்த ராஜேந்திரனிடம் இன்னொரு சாக்கு வியாபாரி போனில் பேசியுள்ளார். அப்போது, டெண்டர் எடுத்த சாக்குகளை ஏன் எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன், அதிக விலைக்குச் சாக்குகளை எடுத்தப்பிறகு மந்திரிக்குக் கமிஷன் கேட்டதாலும் இணைப் பதிவாளர் சாக்குகளை எடுக்க வேண்டாம் என்று சொன்னதாலும் சரக்கை எடுக்கவில்லை என்று பதில் சொல்கிறார். இந்த ஆடியோ நமக்கு கிடைத்தது. அந்த ஆடியோவில், "சாக்கு டெண்டர் எடுத்தப்பிறகு இணைப் பதிவாளர் (ஜே.ஆர்) சாக்கு எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் சாக்குகளை எடுக்கவில்லை. மந்திரிக்கு ஒரு ரூபாய் சாக்குக்கு உண்டு. நெருக்கடி இருந்த சமயத்தில் மந்திரிக்குப் பணம் வேண்டாம் என்று சொன்னார்கள். அந்தப்பணத்தை எங்களுக்குத் தாருங்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர். ஒரு சாக்கை 11.30 ரூபாய்க்கு எடுத்துவிட்டேன். நெல்லையில் ஒரு சாக்கு 9 ரூபாய்தான் டெண்டர் எடுக்கப்படுகிறது. இதனால் கமிஷன் பணம் கொடுக்கவழியில்லை. இணைப் பதிவாளர் சாக்கு எடுக்க வேண்டாம் என்று சொன்னதால் அதை எடுக்கவில்லை. இதனால் மறுடெண்டர் விட ஏற்பாடு நடந்துவருகிறது"என்று ராஜேந்திரன் சொல்கிறார். 

இதுகுறித்து இணைப் பதிவாளர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, "நான், எந்த வியாபாரிடமும் மந்திரிக்குப் பணம் கேட்கவில்லை. நீங்கள் சொல்லும் தகவல் உண்மையல்ல. நெல்லை மாவட்டத்தில் டெண்டர் எடுத்தவர்கள் சாக்குகளை எடுத்துவருகின்றனர்" என்று தெரிவித்தார். அடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே நம்மை தொடர்பு கொண்டு, "நான், இந்த மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறேன். இதனால், எனக்கு இடையூறு ஏற்படுத்த இதுபோன்ற தேவையில்லாத தகவலை எனக்கு வேண்டாதவர்கள் பரப்பிவருகின்றனர்"என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்துகளைப் பெற முயன்றோம். பலனில்லை. அவர் இது தொடர்பாக விளக்கமளித்தால், பரிசீலனைக்குப் பின் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்! 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close