Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்! பின்னணி என்ன?

eda

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வரின் அறையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இதில், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, 'ஆட்சியை நீங்கள் வழிநடத்துங்கள். கட்சியை தினகரன் வழிநடத்துவார்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், தினகரனை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு எனவும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தினகரன் தலைமையில்தான் நடக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது. மதுரை எம்.எல்.ஏ சரவணனின் ரகசிய வீடியோ வெளியான பிறகு அ.தி.மு.க அணிகளுக்கிடையே சலசலப்பு அதிகரித்துள்ளது. 

பெங்களுரு சிறையிலுள்ள சசிகலாவை, டி.டி.வி.தினகரன் சந்தித்துள்ள சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் இந்தச் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திகார் சிறையிலிருந்து வெளிவந்த பின்பு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்து வரும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது .

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close