Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க வலையில் எதிர்க்கட்சிகள் சிக்கிக்கொள்ளக்கூடாது... திருமாவளவன் எச்சரிக்கை!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி, போட்டியின்றி வெற்றிபெற பா.ஜ.க விரிக்கும் இந்தச் சதிவலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிக்கிக்கொள்ளக்கூடாதென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளர்ச்சி என்ற வாக்குறுதியை முன்வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாடு எல்லாத் தளங்களிலும் சரிவைச் சந்தித்துவருகிறது. பிரதமர் மோடியின் செல்லாநோட்டு அறிவிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டது என மோடி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிற நிலை உருவாகியுள்ளது. மோடி அரசின் விவசாய விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ‘ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்’ என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி ஆண்டுக்கு வெறும் 2 இலட்சம் வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறார். இது இளைஞர்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாடு வளர்ப்பதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ஏழை-எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி நாடு முழுவதும் மக்களிடையே பா.ஜ.க அரசுக்கு எதிரான மனநிலை உருவாகி வருகிறது. இந்தச் சூழலில் மோடி அரசை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்வது அவசியமாகும். அதற்கான வாய்ப்பைக் குடியரசுஸத் தலைவர் தேர்தல் வழங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதைவிடவும் பா.ஜ.கவை எதிர்த்து அனைத்து கட்சிகளையும் அணிதிரட்டுவது என்பதே முதன்மையானது. அதற்கு எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே சரியாக இருக்கும். அதைவிடுத்து பா.ஜ.க வேட்பாளரை ஏற்றுக்கொண்டால் அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைச் சீர்குலைப்பதாகவே பொருள்படும். எனவே, பா.ஜ.கவின் சதிவலையில் காங்கிரசோ, இடதுசாரிகளோ, பிற எதிர்கட்சிகளோ சிக்கிக்கொள்ளக்கூடாது என வலியுறுத்துகிறோம். பொது வேட்பாளர், கருத்து ஒற்றுமை என்பதெல்லம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கு பா.ஜ.க கையாளும் தந்திரங்கள்தான். இதை எதிர்க்கட்சிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இனியும் காலம் தாழ்த்தாமல் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close