Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் அருகே ஆழ்துளைக் கிணற்றில் ஆயில் கலந்த நீர்!

விவசாயிக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஆயில் கலந்த தண்ணீர் வருவதால் சுற்றுப்புற மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கூடங்குளம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கிராமம், இளையநயினார்குளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி இஸ்ரவேல். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பயிர்களுக்குப் போதுமான அளவு தண்ணீர் இல்லை. அதனால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க முடிவு செய்தார். அதன்படி, அவர் சுமார் 1000 அடி ஆழத்துக்குப் போர் அமைத்தார். 

அதில், மோட்டார் மூலமாகத் தண்ணீரை எடுத்தபோது அதிர்ச்சியளிக்கும் வகையில் தண்ணீர் சூடாக இருந்ததுடன் பச்சை நிறத்தில் ஆயில் கலந்து வெளியே வந்துள்ளது. இதற்கான காரணம் அறியாத நிலையில், இந்தத் தகவல் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் பரவியது. அதனால், ஏராளமான பொதுமக்கள் விவசாயி இஸ்ரவேல் தோட்டத்திலிருந்து வெளியே வரும் ஆயில் கலந்த நீரை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

கூடங்குளம் அணு உலைக்கு அருகிலுள்ள கிராமத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close