Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!

அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா புலிகள் சரணாலயத்தில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 83 ஆக இருந்தது.

புலிகள்

கவுஹாத்தியில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது காசிரங்கா புலிகள் சரணாலய வனப்பகுதி. இங்குள்ள காசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் புராசபோரி பூங்காவில், கடந்த 3 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. காசிரங்கா பூங்காவில் மட்டும் 95 புலிகள் இருப்பதாகவும், புராசபோரியில் குட்டிகளுடன் சேர்ந்து 9 புலிகள் இருப்பதாகவும் அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

புலிகள் வசிப்பதற்கு உகந்த சூழல் அந்த இரு உயிரியல் பூங்காங்களிலும் நிலவுவதால், இந்த உயர்வு என்றும், இது மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கை இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவிலானது என்றும் காசிரங்கா உயிரியர் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள வனப்பகுதிகள் மற்றும் வன உயிரியல் பூங்காக்களில் உள்ள புலிகளைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close