Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுகிறது புதுச்சேரி!

'மாட்டிறைச்சி தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது' என்று மத்திய அரசுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்திருந்தார். இதன்படி இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

நாரயணசாமி

வர்த்தகரீதியாக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு, புதுச்சேரி அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று மாநில முதல்வர் நாராயணசாமி அதிடியாக அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்றாமல் இருப்போம் என்றும் புதுச்சேரி சட்டசபையில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மாட்டிறைச்சித் தடைக்கு எதிரான தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் முன்மொழிய உள்ளார். இத்தீர்மானத்தில் மாட்டிறைச்சி தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் எனக் கூறப்படவுள்ளது.  முன்னதாக கேரளா மற்றும் மேகாலயா அரசுகள் தங்கள் சட்டமன்றங்களில் மாட்டிறைச்சிக்கு எதிரான தடையை நீக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close