Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நண்பரை கொன்ற தமிழக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கேரளா நீதிமன்றம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டு வேலை செய்த நண்பரை கொன்று 5 லட்சம் மதிப்புள்ள ஆபரண கற்களை திருடியவருக்கு  நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

திருவனந்தபுரம் மணக்காட்டை சேர்ந்த ஆபரண கல் வியாபாரியின் வீட்டில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வியாபாரி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது வீட்டில் சம்சுதீன் மட்டும் தனியாக இருந்தார். மறுநாள் 5-ஆம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்த இரண்டுபேர் சம்சுதீனை அடித்துக் கொன்று விட்டு வீட்டிலிருந்த 5 லட்சம் மதிப்புள்ள ஆபரண கற்களை திருடி சென்றனர். இது குறித்து போர்ட் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், நண்பர்களான காயல்பட்டிணத்தை சேர்ந்த ஜாகீர் உசேன், ஜரூக் ஆகிய இருவரும்தான் சம்சுதீனை கொன்று ஆபரண கற்களை திருடியது தெரியவந்தது. சென்னையில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவர்களை கேரள போலீஸார் கைது செய்தனர். திருடிய ஆபரண கற்களை சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சூர், கோழிக்கோடு போன்ற இடங்களில் விற்பனை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்னர் கேரள போலீஸார் அவைகளை மீட்டனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே ஜாகீர் உசேன் தப்பி சென்றார். இதற்குள்ளாக ஜரூக்குக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. தப்பிச் சென்ற ஜாகீர் உசேனை  2009ஆம் ஆண்டு சென்னையில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. நண்பனை கொலை செய்த ஜாகீர் உசேனுக்கு ஆயுள் தண்டனையும், 40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close