Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாராயணசாமி

வர்த்தகரீதியாக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. இந்த ‘மாட்டிறைச்சித் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது' என்று மத்திய அரசுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசின் சார்பாகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று மாநில முதல்வர் நாராயணசாமி அதிடியாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசின் சட்டத்தைப் புதுச்சேரியில் நிறைவேற்றாமல் இருப்போம் என்றும் புதுச்சேரி சட்டசபையில் முடிவு செய்யப்பட்டது.

இன்று கூடிய புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மாட்டிறைச்சித் தடைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து அவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டசபையிலுள்ள அத்தனை உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தில் மாட்டிறைச்சித் தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கேரளா மற்றும் மேகாலயா அரசுகள் தங்கள் சட்டமன்றங்களில் மாட்டிறைச்சிக்கு எதிரான தடையை நீக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close