Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபாநாயகர் தனபாலால் சட்டப்பேரவையில் கலகலப்பு!

இடிந்தகரை மீன்கள் ருசியாக இருக்கும் என்று ராதாபுரம் எம்எல்ஏ கூறியதால், அந்த மீன்களைச் சபாநாயகர் கேட்டதால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை குறித்த மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை பேசுகையில், நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் அவர் பேசுகையில், இடிந்தகரை மீன்கள் சுவையாக இருக்கும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், இடிந்தகரை மீன்களை எம்எல்ஏ-க்களுக்கு அளிக்கலாமே என்றதும் சட்டப்பேரவை கலகலப்புடன் காணப்பட்டது. உடனே எழுந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வனத்துறை மானிய கோரிக்கையின்போது மீன்கள் வழங்கப்படும் எனப் பதிலளித்தார். மேலும், இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

இதனிடையே, எம்எல்ஏ தங்கபாண்டியன் கேள்விக்குப் பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராஜபாளையத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் நிதி ஆதாரம் பெற்று விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், தாமிரபரணியில் கழிவுநீர்க் கலப்பதைத் தடுக்க பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும், நிதி ஆதாரத்தைக் கருத்தில் கொண்டு படிப்படியாக பாதாள சாக்கடைகள் கட்டப்படும் என்று கூறிய அமைச்சர், பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கதவணைகளைக் கட்டும் பணி இந்தாண்டு தொடங்கப்படும் என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close