Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம்!

நீதிமன்றத் தடையை மீறி சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டில் கல்லூரி மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாடி வருகின்றனர். 


சென்னையில் 'பஸ் டே' கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி அவ்வப்போது 'பஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவல்லிக்கேணியில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாபிராம் - அண்ணா சதுக்கம் செல்லும் '27H' மாநகரப் பேருந்தில், மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதி சாலையிலிருந்து, மாநிலக் கல்லூரியை நோக்கி இந்தக் கொண்டாட்டம் நடந்து வருகிறது. சுமார் 50 மாணவர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் இருசக்கர வாகனத்திலும் பல்வேறு மாணவர்கள், இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் போலீஸார் விரட்டி வருகின்றனர். கல்லூரி வளாகத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'பஸ் டே' கொண்டாட உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால், மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close