Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்எல்ஏ-க்களுக்குப் பேரம்: சபாநாயகரிடம் ஆதாரம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்குப் பேரம் பேசப்பட்ட வீடியோ ஆதாரத்தை, சபாநாயகரிடம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

MK Stalin

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்று மூன்று அணிகளாகத் தற்போது அ.தி.மு.க இயங்கி வருகிறது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, கூவத்தூரிலிருந்த அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் கோடிகளில் பேரம் பேசிய வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்டது.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், பேரவைக் கூட்டத்தொடரிலும், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில், பேரம் பேசியதாக எம்எல்ஏ சரவணன் கூறும் வீடியோ ஆதாரத்தை, சபாநாயகர் தனபாலிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம், மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close