Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒபாமா முதல் ட்ரம்ப் வரை இதைத்தான் சாப்பிடுகிறார்கள்! சூட்டைக் கிளப்பிய திருமாவளவன்!

ஒபாமா, முதல் ட்ரம்ப் வரை அனைவருமே மாட்டுக்கறி தின்பவர்கள்தான் என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மாடு மேய்க்கக்கூட தகுதியில்லாதவர் மோடி என்று கடுமையாக விமர்சித்தார்.

அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவிழா பொதுக்கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "உலகத்தில் உள்ள இந்தியன் அல்லாதவனுக்குத் தெரிகிறது அம்பேத்கரின் ஆற்றல். ஆனால் இந்த நாட்டிலுள்ள சிலர் அம்பேத்கரின் படத்தைப் பார்த்தால் சாணி எடுத்து அடிக்கிறார்கள். சிலையைப் பார்த்தால் கல்லை எடுத்து அடிக்கிறார்கள். அரசியல்வாதிகள் அம்பேத்கரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பாவம் அவர்கள் புத்தகத்தைப் படித்தால்தானே அம்பேத்கரைப் பற்றித் தெரியும். அப்படியெல்லாம் படித்து அறிவுத்திறமையைப் பெருக்கிக்கொண்ட அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் யாருமில்லை. புரட்சியாளரின் அருமை பெருமைகளை இந்தத் தேசத்திலுள்ள சில சாதி வெறியர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 100 கோடி ரூபாய் செலவில் அம்பேத்கருக்கு 125 அடி வெண்கலச் சிலை வைக்கிறார்கள். அவர்களுக்குள்ள உணர்வுகள்கூட தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை.

தமிழகத்தில் ஜெயலலிதா அம்மையார் இல்லாத சூழலில் அதிமுக இனி எப்படி இயங்கப்போகிறது. யார் தலைவர், யார் இந்தக் கட்சியைக் கட்டுக்கோப்பாகக் காப்பாற்றப்போகிறார்கள் என்பதுதான் அதிமுகவினரின் கவலை. ஆனால் சிலர் எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிடலாம் என நப்பாசையோடு கனவு கண்டுக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுவதற்கு விடுதலை சிறுத்தைகளுக்குத் தகுதியில்லையா, இந்த நாட்டு மக்களின்மீது அக்கறை கொண்டவர்கள் நாங்கள். ஏன் இந்த நாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளக்கூடாது. இந்தியாவில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். போன்ற கட்சிகளை ஏன் எதிர்க்கிறோம் என்றால்,  அவர்கள் இந்த நாட்டின் ஊழலை ஒழிக்கவேண்டும் என்று கவலைப்படவில்லை. அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. அந்த ஊழலை ஒழிப்பதற்கு ஏன் மோடி திட்டம் தீட்டவில்லை. வறுமையில் வாடும் மக்களுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்காதவர் மோடி. நாடுமுழுவதும் மதுவால் மக்கள் சீரழிந்துக் கொண்டிருக்கிறார்கள். மது பழக்கத்தால் எல்லா சமூகமும் சீரழிந்து வருகிறது. எல்லா சமுதாயத்தினரும் குடிபழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்கள். மோடி அதைப்பற்றி கவலைப்பட்டிருக்கிறாரா.  காந்தியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால் போதுமா, அவரது கொள்கையை நிறைவேற்ற வேண்டாமா. இந்தச் சமூகத்தைப் பற்றி அவருக்கு கவலையில்லை. அவரது கவலையெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவதுதான்.

மாட்டுக்கறி சாப்பிடுவது எங்களுடைய விருப்பம். அதைச் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார். நாட்டைக் காப்பாற்ற வாங்க என்றால், மாட்டைக் காப்பாற்ற வருகிறார். அதற்கு நீங்கள் மாடுமேய்க்க போயிருக்கலாம், நாடாளுவதற்கு வந்திருக்கக்கூடாது. மாடு மேய்ப்பதற்குகூட நரேந்திரமோடிக்கு தகுதிக்கிடையாது.  மாடு விற்பதனால் பல லட்சம் பேர் லாபத்தை ஈட்டுகிறார்கள்.  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முதல் தற்போதைய அதிபர் ட்ரம்ப் வரை அனைவருமே மாட்டுக்கறி தின்பவர்கள்தான். உலகத்தில் மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் எவருமே கிடையாது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும், அயல்நாடுகளிலிருந்து ஜெர்சி பசுக்களைக் கொண்டு வரவேண்டும், இதுதான் அவரது திட்டம். ஆகவே பா.ஜ.க-வின் இந்த ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கு எதிரானது. இவர்கள் ஆட்சி நீடித்தால் சாதி, மத வெறியர்கள் இங்கு கொட்டமடிப்பார்கள். ஆகவே, அவரவர்கள் தங்களுக்குத் தேவையான தெய்வங்களையும், மதத்தையும் தேர்வு செய்யவும் அவரவர்களுக்கு உரிமை உண்டு. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததால் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், தலித் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அதேபோல தமிழ்நாட்டில் மதவெறியர்களும், சாதி வெறியர்களும் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதனால்தான் அதிமுக ஆட்சி தொடரட்டும், கலைக்கக்கூடாது என நான் கூறும் காரணம். ரஜினி மாற்று கட்சியில் சேரவாய்ப்பில்லை. அவர் தனிக் கட்சித் தொடங்கினால் கலைஞர், ஜெயலலிதா இருந்த வெற்றிடத்தை நிரப்புவார்" என்று முடித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close