Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்து இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்! தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பத்து இடங்களில், அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் இன்று அறிவித்தார்.

அ.தி.மு.க அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல், அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், அம்மா திரையரங்கு என்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.  

இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், "தமிழகத்தில் பத்து இடங்களில், அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும். 

இதற்காக, சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை நந்தனம், தஞ்சை மாவட்டம் இரும்புத்தலை, திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, நாகை மாவட்டம் கோவில்பத்து, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, கருர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஆகிய பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, இந்த பத்து இடங்களில் பெட்ரோல் பங்க் அமைக்கப்படும். பிறகு படிப்படியாக தமிழகம் முழுவதும், இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து பெட்ரோல் பங்க் அமைக்கப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில், ரூ.10 கோடி மதிப்பில் 25 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். அதேபோல், ரூ.5.5 கோடி மதிப்பில் 5 நேரடி நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும். மேலும், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் 4,460 பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும்" என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close