Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மண்டை உடைப்பு! மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு!

பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் தாக்கியதில் கல்லூரி முதல்வர் காளிராஜின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

pach

விடுமுறை முடிந்து இன்று பச்சையப்பன் கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து முதல் நாள் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் சாலையில் வெடி வெடித்து கொண்டாடினர். இதனால் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வர் காளிராஜ், அடையாள அட்டைகளைச் சரி பார்த்து மாணவர்களைக் கல்லூரிக்குள் அனுப்ப உத்தரவிட்டார்.

இதில் அடையாள அட்டை இல்லாத 18 மாணவர்கள் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு மீண்டும் மோதல் உருவாகியது. இதையடுத்து சில மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி முதல்வர் காளிராஜின் மண்டை உடைந்தது. அவரது கார்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதனால் பச்சையப்பன் கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close