Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நாங்கள் பார்க்கத்தான் செய்கிறோம்; எதற்கும் ஓர் எல்லை உண்டு'- தமிழக அரசை எச்சரித்த நீதிபதி கிருபாகரன்

court

டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடுபவர்கள் விஷமிகளா என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் பெண்களே போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அப்போது நீதிபதி கிருபாகரன், 'டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள், சிறார்களை விஷமிகள் என்பதா? டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்களும், குழந்தைகளும் போராடுவதை ஊடகங்களில் நாங்கள் நேரடியாகப் பார்க்கிறோம். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்கள்மீது குற்றம் சுமத்த ஓர் எல்லை உண்டு' என எச்சரித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close