Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்தார்களா?' கண்டுபிடிக்க விஜயதாரணியின் டிப்ஸ்

விஜயதாரணி

மிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க் கட்சிகள் கூண்டோடு அவையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றன. ஜி.எஸ்.டி. மசோதா, மாட்டுக்கறி, வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு என்று பல விஷயங்கள் விவாதப்பொருளாகியுள்ளன. இந்நிலையில், ''எப்படி இருக்கிறது, சட்டசபைக் கூட்டத்தொடர்'' என்று காங்கிரஸ் கொறடாவும், எம்.எல்.ஏ-மான விஜயதாரணியிடம் கேட்டோம்.

"ஜனநாயகம் தழைத்தோங்கும் இடமாகச் சட்டசபை மாறவேண்டும் என்ற ஆசைதான் எனக்கு எப்போதும் இருக்கிறது; இப்போதும் இருக்கிறது. அனைத்துத் துறைகளுக்கும் துறைரீதியான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தரவேண்டும். அப்போதுதான் மக்கள் பணிகளில் தொய்வுநிலை ஏற்படாது. அதேவேளையில், மத்திய அரசிலிருந்து நமக்கு வரும் நிதியானது மிகவும் குறைபாட்டுடன் உள்ளது. இந்தியாவில் அதிக வரி ஈட்டிக் கொடுக்கும் நான்கு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால், மத்தியிலிருந்து நமக்குக் கிடைக்கும் நிதி மட்டும் குறைவு. இதனால், தமிழ்நாடு நெருக்கடிக்கு உள்ளாகிறது. மாட்டுக்கறி தொடர்பான பிரச்னையை எங்கள் தரப்பில் விவாதிக்க, சபாநாயகருக்குக் கவன ஈர்ப்பாகக் கொடுத்துள்ளோம். அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும்போது எங்கள் கருத்தை முன்வைப்போம்.

எம்.எல்.ஏ-க்கள் பணம் வாங்கியதாகச் சொல்லப்படும் விவகாரத்தை அவையில் விவாதிக்காமலேயே, 'அந்த விஷயம் கோர்ட்டில் இருக்கிறது' என்கிறார்கள்... அது சரியல்ல. அந்த வழக்கு கோர்ட்டில் இன்னும் 'நம்பர்' கூட ஆகவில்லை. காவிரி, முல்லை பெரியாறு ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு போன்ற பல விஷயங்கள் கோர்ட்டில் இருக்கும்போதே தமிழகச் சட்டசபையில் விவாதமாக்கப்பட்டிருக்கிறது; தீர்மானமாக மாறியிருக்கிறது; சட்ட வடிவாக்கம் பெற ஒப்புதலுக்கும் போயிருக்கிறது. இதெல்லாம் கடந்தகால வரலாறு. அப்படியே கோர்ட்டில் இருந்தாலும் அதை விவாதப் பொருளாக ஆக்கினால் இரண்டு வகையில் லாபம் உண்டு. ஒன்று, அப்படியொரு தவறு நடந்திருந்தால் இந்த அரசாங்கம் முறையான வாக்கெடுப்பு நடத்தவில்லை என்பது உறுதியாகும். மற்றொன்று, அப்படித் தவறு நடக்கவேயில்லை என்றால், குறிப்பிட்ட சபை உறுப்பினர்கள்மீது அநியாயமாகக் குற்றஞ்சாட்டினர் என்பது தெரியவரும். அப்படி நடந்திருந்தால், அது இந்த அவையின் மாண்பைக் கெடுப்பதாகவே கருதவேண்டும். மொத்தத்தில் இது, அவைக்குத் தொடர்புடைய உறுப்பினர்களின் பிரச்னை என்பதால், அதை அவையில்வைத்தே விவாதிக்கலாம். தவறு நடக்கவில்லை என்றால், தன்னிலை விளக்கம் கொடுக்க உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும். அப்போது, அவை மீறலுக்கும் அந்த விஷயத்தை உட்படுத்தலாம். அனைத்துமே சபாநாயகர் கையில்தான் இருக்கிறது என்பதையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஏனெனில், அனைத்துமே அவையில் சபாநாயகருடைய வானளாவிய உரிமைக்கு உட்பட்டதுதான்" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close