Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதுநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ரத்து!

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 50 சதவிகித இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் 50 சதவிகிதத்தில் 25% அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அதேபோல், கிராமப்புற மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு வந்தன. இதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

Chennai High Court

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராமப்புற மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கும், தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, முதுநிலை மருத்துவப்படிப்புக்கு கலந்தாய்வு ஏற்கெனவே முடிந்துள்ளது. அந்த மூன்று கலந்தாய்வு பட்டியல்களையும் ரத்து செய்த நீதிமன்றம், மூன்று நாள்களில் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரித்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், 'முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்', என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close