Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வை-ஃபை வசதியுடன் 'ஸ்மார்ட் ட்ரீ'... கோவை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்

இந்தியா முழுவதும் மாநகராட்சிகளை மேம்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள், '9 யூனிட் மின்சாரம் வழங்கும் இந்த மரத்திலிருந்து 9 தெரு விளக்குகளை எரியச் செய்ய முடியும். மேலும், இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

இந்தியாவில் முதல்முறையாக பொது மக்களுக்கு நிழல் தரும் வகையிலும் இந்த 'ஸ்மார்ட் ட்ரீ' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு 'ஸ்மார்ட் ட்ரீ' அமைப்பதற்கு 3.5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இதில் விளம்பரங்கள் செய்வது மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் எனவும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், 'முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையான 30 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையமும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளது' எனக் கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close