Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சொல்லிவிடவா’ என்று கேட்கிறார் அர்ஜுன்!

“தொடர்ந்து 10 படங்கள்லாம் எனக்கு ஹிட் அடிச்சிருக்கு. அப்பல்லாம் ஆகஸ்ட் 15 என் பிறந்த நாள் ன்னைக்கு நியூஸ்பேப்பர்கள்ல பத்து, பதினைஞ்சு பக்கங்களுக்கு, 'ஆக்ஷ்ன் கிங்கே, தலைவனே...’னு விளம்பரங்கள் வரும். 'ஹேப்பி பர்த்டே அர்ஜுன்’னு பொக்கேக்களைத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வந்து குவிச்சுட்டுப் போவாங்க. வீடு முழுக்க பூக்களா இருக்கும். 'அட... இவங்களுக்கு எல்லாம் நம்மளை இவ்வளவு பிடிக்குதே’னு நெகிழ்ந்து நிப்பேன். சில தொடர் ஃப்ளாப்களுக்குப் பிறகு சின்ன விளம்பரம்கூட இல்லாத, ஒற்றை ரோஜாப் பூகூட இல்லாத, வீடே வெறிச்சுக்கிடக்கிற பிறந்த நாள்களையும் கடந்திருக்கேன். அப்போ, 'அவ்ளோ நெருக்கமா இருந்தவங்க, இப்படி அனாதையா விட்டுட்டுப் போயிட்டாங்களே’னு எமோஷன் ஆகியிருக்கேன். இப்படி இரு துருவங்களின் அனுபவங்களும் என்னை பேலன்ஸ் பண்ணுச்சு. 'சார்... 'முதல்வன்’ சூப்பர் ஹிட்’னு சொன்னாலும், 'சார் அந்தப் படம் அட்டர் ஃப்ளாப்’னு சொன்னாலும், 'அப்படியா... ஓ.கே’னு ரெண்டையும் ஒரேமாதிரி எடுத்துக்கப் பழகினேன். அதை உணர்ந்த பிறகு பிறந்த நாள் கொண்டாடுறதையே நிறுத்திட்டேன். ஆகஸ்ட் -14 அன்னைக்குத் திருப்பதி போயிட்டு, மறுநாள் பிறந்த நாள் அன்று தரிசனம் முடிச்சுட்டு, அப்படியே காட்டுக்குள்ள இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நடந்தே போய் தரிசனம் செய்வேன். இதுதான் இப்போ எல்லாம் என் பிறந்த நாள்!

அர்ஜுன்

நம்ம பேட்ச் நடிகர்கள் எல்லாரும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டாங்க; இப்போ என் மகளும் நடிக்க வந்துட்டாங்க; ஓ.கே போதும்னு நினைச்சு ரிலாக்ஸ் ஆகிட்டா, அன்னைக்கே நான் துருப்பிடிக்க ஆரம்பிச்சிருவேன். என் மகள் ஐஸ்வர்யா திறமைசாலி. அவங்க ப்ளஸ், மைனஸ் தெரிஞ்ச நானே, அவங்களை வெச்சு இந்தப் படம் பண்றேன்'' இது ஆனந்த விகடன் பேட்டிக்காக சென்றபோது அர்ஜுன் சொன்னவை. 

அன்று சொன்னபடி அர்ஜுன் தற்போது தன் மகளை வைத்து ‘சொல்லிவிடவா’ என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். முதலில் இந்தப் படத்துக்கு ‘காதலின் பொன் வீதியில்’ என்று தலைப்பிட்டு இருந்தனர். தற்போது “சொல்லிவிடவா” எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார் அர்ஜுன். காதல், கலர்ஃபுல் காமெடி, அனல்பறக்கும் ஆக்ஷ்ன்... இப்படி ரசிகர்களையும் கவரக்கூடக் கலவைகளை உள்ளடக்கி "சொல்லிவிடவா" தயாராகி இருக்கிறது. ஹீரோயின் ஜஸ்வர்யா அர்ஜுன், சந்தன் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார். 

அர்ஜுன்

இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், "மொட்டை" ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகிபாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். H.C.வேணு கோபால் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களுக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்கிறார். கேகே படத்தொகுப்பு, ஆர்ட் டைரக்ஷனை சீனு கவனிக்க, கிக் ஆஸ் காளி ஆக்ஷ்ன் பகுதிகளைக் கவனிக்கிறார். ஆடியோ வெளியீடு விரைவில் நடைபெறவுள்ளது. அர்ஜுன் அன்று பார்த்ததுபோல் இன்றும் அப்படியே இருக்கக் காரணம் இப்படி இயங்கிக்கொண்டே இருப்பதுதான். 

அர்ஜுன்

...

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close