Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி மீண்டும் துவங்கியது

chennai

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 7 மாடி கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. தொடர்ந்து கட்டடம் வலுவிழந்ததால், அதை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக, 'ஜா கட்டர்' இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

chennai

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 'ஜா கட்டர்' இயந்திரத்தை இயக்கிய சரத்குமார் என்ற தொழிலாளி உயிரிழந்தார். கட்டட இடிபாடுகள் விழுந்து இவர் பலியானார். இவரது மரணத்தைத் தொடர்ந்து இடிப்புபணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று காலைமுதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்குள் கட்டடம் இடிக்கும் பணி முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close