Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதரவற்ற சிறுவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிழந்த நோட்டுக்கு 50 ஆயிரம் வழங்கிய மோடி!

ராஜஸ்தானிலுள்ள கோட்டா நகரத்தைச் சேர்ந்தவர் சூரஜ், இவரது தங்கை சலோனி. தந்தையில்லாத நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் தாயாரும் இறந்து போனார். இறுதிச்சடங்கு முடிந்த பின்னர், உறவினர்கள் வீட்டைச் சோதனையிட்டுப் பார்த்தனர். அப்போது பீரோவில் 96 ஆயிரம் மதிப்புள்ள 500,1000 ரூபாய் பழைய நோட்டுகள் இருந்துள்ளன. கொஞ்சம் நகையும் இருந்துள்ளது. உறவினர்கள் சிறுவர் சிறுமியை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். 

மதிப்பிழந்த பழைய நோட்டுகளை அவர்கள் மாற்ற முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். தொடர்ந்து, பிரதமர் நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் இவர்களுக்கு வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, 5 ஆண்டுகளுக்கான இன்சூரன்சும் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து சிறாருக்கு வந்த கடிதத்தில், ''இந்தத் தொகை உங்களின் பிரச்னைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை. ஆனாலும் குறைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்காக வருந்துகிறேன் ''என கூறப்பட்டுள்ளது. கோட்டாவைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு 25 ஆயிரம் ரூபாயை இவர்களுக்கு ஏற்கெனவே வழங்கியுள்ளது.  

கடந்த நவம்பர் மாதத்தில் பழைய 500 , 1000  ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, புதிய 500, 2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. 

photo: Hindustan Times

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close