Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம்.. பதறிய தி.நகர் மக்கள்!

chennai silks

தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு எற்பட்டது. ஆனால், கட்டடத்தின் அந்தப்பகுதியைத் தாங்கள்தான் இடித்தோம் எனக் கட்டட இடிப்பு ஒப்பந்தக்காரர் பீர் முகமது பேட்டியளித்துள்ளார். சென்னை, தி.நகரில் மே 31 ஆம் தேதி, ஏற்பட்ட பெரும் தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாகச் சேதமடைந்தது. இதனால் வலுவிழந்த அக்கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இடிபாடு விழுந்து ஊழியர் ஒருவர் பலியானதால், கட்டட இடிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கட்டடம் இடிக்கும் பணி மீண்டும் துவங்கியது.

கட்டட இடிப்புப் பணிகள், 'ஜா கட்டர்' இயந்திரத்தின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றிலும் புகை மண்டலம் சூழ்ந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில், கட்டட இடிப்பு ஒப்பந்தக்காரர் பீர் முகமது பேசுகையில், 'கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழவில்லை. எங்களின் திட்ட மேற்பார்வையின்படியே இடிக்கப்பட்டது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எந்தத் தொழிலாளருக்கும் காயமில்லை. ஒரேயொரு இயந்திரம் மட்டுமே உள்ளே செயல்பட்டது. மிச்சமிருக்கும் மற்றொரு பாதி கட்டடத்தையும் இன்று மாலைக்குள் இடித்து விடுவோம். இடிபாடுகளை அள்ளுவதற்கு 100 லாரிகள் தயாராகவுள்ளன', எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close