Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயற்கை வளம் கொழிக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க களத்தில் இறங்குகிறது வனத்துறை!

இயற்கை வளம் கொழிக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்பதற்கான முதல் கட்டப்பணியைத் தமிழக வனத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

பள்ளிக்கரணை

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதைத் தாங்கி, தேக்கி வைத்து கடலுக்கு அனுப்பும் இயற்கைச் சூழலை தன்னகத்தே கொண்டிருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்த அளவில் இருந்த இந்தச் சதுப்பு நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அரசு திட்டங்களுக்காக எடுக்கப்பட்டும், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வந்தது. இதன் விளைவாக இன்றைக்கு இதன் பரப்பளவு பத்தில் ஒரு பகுதியாக 600 ஹெக்டேர் அளவுக்குச் சுருங்கி விட்டது.

தமிழகத்திலுள்ள 3 சதுப்பு நிலங்களில் முக்கியமான ஒன்றாகப் பள்ளிக்கரணை இருக்கிறது. 4 மாதங்கள் தண்ணீர் நிறைந்தும், 8 மாதங்கள் காய்ந்த நிலையிலும் இருக்கும். பள்ளிக்கரணை  சதுப்பு நிலத்தைத் தேடி வெளிநாட்டுப் பறவைகளும் வருகின்றன. பல்வேறு கட்ட கோரிக்கைகளுக்குப் பிறகு சமீபத்தில் இந்த நிலம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரை வனத்துறை அணுகியுள்ளது. மேலும், குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேலி அமைக்கும் பணியையும், தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகளையும் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக வேளச்சேரி முக்கிய சாலையில் 1600 மீட்டர் தொலைவுக்கு வேலி அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன .

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close