Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

445 மதிப்பெண் எடுத்த பார்வையற்ற மாணவி... குடும்பத்தை வழிநடத்தும் பார்வையற்ற பெற்றோர் உருக்கமான வேண்டுகோள்!

பத்தாம் வகுப்புத் தேர்வில் 445 மதிப்பெண்கள் பெற்றுள்ள பார்வையற்ற மாணவி சுபலட்சுமி, தனது பார்வையற்ற பெற்றோருடன் சேர்ந்து கூடைப் பின்னும் தொழில் செய்து வருகிறார். போதிய வருமானமின்றி தவித்து வரும் மாணவி, முதல்வர் நாராயணசாமிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கண் தெரியாத கூடைப் பின்னும் தொழிலாளி சுப்பன் (55). 38 ஆண்டுகளாக சட்டசபை அருகே செயிண்ட் தான்ழ் வீதி நடைபாதையில் கூடை மற்றும் சேர் இருக்கைகளைப் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சட்டசபை அருகிலுள்ள கிறிஸ்தவ பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களிலுள்ள இருக்கைகளைப் பழுதுபார்க்க குறைந்தளவு கூலியே வாங்குகிறார். அவரது மனைவி தனலட்சுமி (46), மற்றும் மகள் சுபலட்சுமி, மகன்கள் சுதர்சன், சுசிந்தர் என மூன்று பேர் உள்ளனர்.

இவர்களில் அவரது மனைவி மற்றும் மகள் கண் தெரியாதவர்கள். இருந்தும் வீட்டில் சமையல் பொறுப்பு முழுவதையும் பார்த்துக்கொண்டு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 445 மதிப்பெண் எடுத்துள்ளார் சுபலட்சுமி. மகன்கள் இரண்டு பேரும் பள்ளியில் படித்து வருகின்றனர். தனது குடும்பத்தைக் காப்பாற்ற போதிய வருமானம் இல்லாத காரணத்தால் புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியில் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறார் சுப்பன். தற்போது இவருக்குப் புதுச்சேரி அரசு மூலம் வழங்கப்படும் இலவச வீடு மற்றும் தனது மகளைக் கலெக்டராக்க வேண்டும் என்பதே தொழிலாளி சுப்பனின் விருப்பம்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close