Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு ஜெர்மனிகள் இணையக் காரணமாக இருந்த அதிபர் ஹல்மட் ஹோல் மரணம்!

ரு ஜெர்மனிகளும் ஒன்றிணையக் காரணமாக இருந்த அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹல்மட் ஹோல் நேற்று மரணமடைந்தார். 

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் ஜெர்மனி நாடு இரண்டாக உடைந்து கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி எனப் பிரிந்தது. கிழக்கு ஜெர்மனிக்குக் கிழக்கு பெர்லினும், மேற்கு ஜெர்மனிக்கு பான் நகரும் தலைநகராக இருந்தன. பெர்லின் நகரில் இரு நாடுகளையும் பிரித்து, சுவரும் எழுப்பப்பட்டிருந்தது. கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை Christian Democratic Union கட்சியைச் சேர்ந்த ஹல்மட் ஹோல் மேற்கு ஜெர்மனி அதிபராக இருந்தார். இரு நாடுகளையும் மீண்டும் இணைக்க இவர் பெரும் முயற்சி எடுத்ததைத் தொடர்ந்து, 1989-ஆம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. 

பிறகு, 1990-ஆம் ஆண்டு கிழக்கு, மேற்கு ஜெர்மனி நாடுகள் ஒன்றிணைந்தன. கடந்த 1990 முதல் 1998-ஆம் ஆண்டு வரை, ஒருங்கிணைந்த ஜெர்மனிக்கும் ஹல்மட் ஹோல் அதிபராக இருந்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஜெர்மனி வரலாற்றில் 16 ஆண்டுகள் அதிபராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. 87 வயதான ஹல்மட் ஹோல், நேற்று Ludwigshafen நகரில் மரணமடைந்தார். இப்போதைய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், இவரது சிஷ்யைதான். ஏஞ்சலா மெர்கலுக்கு முதன்முதலாக அமைச்சர் பதவியும் இவர்தான் வழங்கினார். ஹல்மட் ஹோலின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close