Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புகழேந்தியின் பாட்டும்.. ஜெயக்குமாரின் பழமொழியும்! - தமிழக சட்டசபை கலகலப்புகள்

சட்டமன்றம்

தமிழக சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டத்தில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும் பஞ்சமில்லாமல் நடந்தேறின. 
பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது பல்வேறு ஃபைல்கள் தேக்கம் அடைந்திருந்தன என அமைச்சர் காமராஜ் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டிப் பேசிவந்தார். அதைப் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே இருந்த பன்னீர் செல்வம், ஒருகட்டத்தில் எரிச்சலாகி, தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வேண்டும் என்று சபாநாயகரி்டம் கேட்டார். சபாநாயகரும் அனுமதி அளித்தார். அப்போது பன்னீர் செல்வம் “நான் முதல்வராக இருந்த காலத்தில் எந்த ஃபைல்களும் மூன்று நாள்களுக்கு மேல் காத்திருக்க வைத்ததில்லை. இது தெரியாமல் அநாவசியமாகக் குற்றம்சாட்டவேண்டாம்” என்று பொங்கிவிட்டார்.

தி.மு.க உறுப்பினர் புகழேந்தியின் கன்னிப்பேச்சில் தொகுதி பிரச்னை குறித்துப் பேசியதைவிட அ.தி.மு.க அரசின் மீதான தாக்குதல்தான் அதிகம் இருந்தது. புகழேந்தி பேசும்போதே “கருணாஸ் பல பாடல்களைப் பாடியுள்ளார். நானும் கேட்டுள்ளேன். சட்டசபையில்கூட அவர் பாட்டுபாடியுள்ளார், அதை எல்லோரும் ரசித்துக் கேட்டோம். இப்போது நான் ஒரு பாட்டு பாடுகிறேன். நீங்கள் எல்லோரும் கேளுங்கள்” என்று சொல்லி, 'ஒரு பொம்மலாட்டம் நடக்குது... இங்கு புதுமையாக இருக்குது. நாலு பேரு நடுவிலே நுாலு ஒருத்தன் கையிலே' எனப் பாடியதும், தி.மு.கவினர் மத்தியில் பலத்த சிரிப்பலை எழுந்தது. பாட்டைப் பாடியதோடு நில்லாமல், தனது  பேச்சை முடிக்கும்போது புகழேந்தி “இந்த பட்ஜெட் தொடரில் கேட்கும் இடத்தில் நாங்களும், பதில் சொல்லும் இடத்தில் நீங்களும் உள்ளீர்கள். ஆனால், அடுத்த பட்ஜெட் தொடரில் பதில் சொல்லும் இடத்தில் நாங்கள் இருப்போம், கேட்கும் இடத்தில்கூட நீங்கள் இருக்கப் போவதில்லை” என்று அடுத்த ஆண்டு ஆட்சியில் மட்டுமின்றி அ.தி.மு.க என்ற கட்சியேகூட இருக்காது என சூசகமாகக்  கூறினார்.

புகழேந்தியின் பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் “கறந்த பாலை மடிக்குள் அனுப்ப முடியாது,.. கருவாடு மீனாக முடியாது” அதேபோல, தி.மு.க ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது” என்று கவுன்டர் கொடுக்க அ.தி.மு.க உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. 

லாவணி பாடியே இருக்கிற நாலரை வருடங்களை ஓட்டிவிடாமல் மக்களையும் பாருங்கள் மக்கள் பிரதிநிதிகளே!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close