Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாடுகளில் ஊர்வலமாக வந்த நெற்களஞ்சியங்கள்... களைகட்டிய நெல் திருவிழா!

நெல்

திருத்துறைப்பூண்டியில் வருடம்தோறும் நடைபெற்றுவரும் தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கியது. 2017 ஆம் ஆண்டுக்கான இத்திருவிழா திருத்துறைப்பூண்டி ARV திருமண மண்டபத்தில் காலை 9 மணியளவில் பேரணியுடன் தொடங்கியது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த நெல் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொடர்ந்து இயங்கிவந்த "நமது நெல்லைக் காப்போம்" மாநில ஒருங்கிணைப்பாளர்  நெல் ஜெயராமன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவதிப்பட்டு வந்த அவர் மீண்டு வந்து பதினோறாம் ஆண்டாக நடத்த முன் நிற்கிறார். இத்தனை ஆண்டாக ஆதிரெங்கம் பகுதியில் நடந்து வந்த இத்திருவிழா இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி ஏஆர்வி மண்டபத்தில் நடக்கிறது.

தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த இயற்கை விவசாயிகளையும் சமூக ஆர்வலர்களையும் கொண்டு பேரணி தொடங்கியது.  திருத்துறைப்பூண்டி நகரின் முக்கியப் பகுதிகள் வழியே நிகழ்ந்த பேரணி மண்டபத்தின் வாசலில் நிறைவடைந்தது. பேரணியில் நம்மாழ்வர் திரு உருவப்படமும் நெற்களஞ்சியங்களும் மாடுகளுடன் ஊர்வலமாக வந்தது குறிப்பிடத்தக்கது.

அரங்கத்தினுள்ளே கருத்தரங்கக்கூடத்தில் பேரணி முடிந்தவுடன் நிகழ்ச்சித் தொடங்கியது. ”நமது நெல்லைக் காப்போம்” தேசிய ஒருங்கிணைப்பாளர் உஷாகுமாரி நபார்டு வங்கி பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா நெல் ஜெயராமன் உள்ளிட்ட நபர்கள் கூடியிருக்க விழா தொடங்கியது.

கிரியேட் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் பொன்னம்பலம் பேசியதாவது : 
"தமிழகமெங்கும் சரிவிகித உணவு பிரச்னை இருக்கிறது. அதற்கு நிரந்தரத் தீர்வு பாரம்பர்ய நெல் விதைகளை மீட்கொணர்வதன் மூலம் சரிசெய்யலாம். இதற்கு ஒட்டுமொத்தமாக களம் காணுவதுதான் சரியானதாகும்.

சோர்ந்திருந்த இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க முன்னின்றவர்களுக்குக் கரம்கொடுத்து இயற்கை விவசாயத்தைத் தாங்கிப்பிடித்தது பசுமைவிகடன். தமிழகமெங்கும் உணவுத்திருவிழா நடப்பதற்கும் இதுவே முக்கியக் காரணமாகும்.

நமது நெல்லைக்காப்போம் கேரள ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் பேசியபோது,  இந்த 21 வருடத்தில் பல லட்ச விவசாயிகள் இறந்திருக்கின்றனர். இந்த 7-வது ஊதியக்குழு வந்தபின்னர் அரசின் கடைசி ஊழியரின் சம்பளம் 18,000 ரூபாய். ஆனால், பொருளாதார சர்வே படி விவசாயியின் ஆண்டு வருமானமே 20,000 ரூபாய் தான். இப்படிப்பட்ட சூழலில் விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

நெல்

ஒரு ஹெக்டேருக்கு ஒரு வருடத்துக்கு மறைமுகமாக இயற்கை விவசாயத்தால் மண்ணுக்கும் மண் தாங்கி இருக்கக்கூடிய நாட்டுக்கும் 2.76 லட்ச ரூபாய்  கிடைக்கும். இதில் விவசாய உழைப்பு பலன்கள் போக மிச்சம் 1.75 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதை விவசாயிகளிடம் சேர்த்தாலே விவசாயிகளின் பிரச்னையும் விவசாயப் பிரச்னையும். தீர்ந்துவிடும் 

நபார்டு பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா விழாப் பேருரையாற்றினார். தனக்குத்தெரிந்த ஒருவர் முன்னர் செயற்கை விவசாயம் செய்து கொண்டிருந்தார் இப்போது இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார். அதற்கான காரணம் தான் முக்கியமானது. "டிராக்டர் சாணி போடாது"னு சொன்னார்.  அதேபோல குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே செய்து வரக்கூடிய இயற்கை விவசாயத்தை பலரும் செய்யத் துவங்க வேண்டும். "

மேலும், பல முக்கிய நபர்கள் கலந்துகொள்ளவிருக்கும் பல அமர்வுகள் இருக்கின்றன.

பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள், மாணவர்கள், சூழலியல் ஆராய்சியாளர்கள், பாரம்பர்யமுறை மருத்துவர்கள் சங்கமிக்கும் மாபெரும் இரண்டுநாள் மாநாடும், இயற்கை விவசாயக் கண்காட்சியும், உணவுத் திருவிழாவும் கோலாகலமாக நிகழ்வது இதன் முக்கிய அம்சமாகும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close