Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆட்சியை கலையுங்கள்'... அ.தி.மு.க-வை அதிர வைத்த ஸ்டாலினின் கோரிக்கை!

அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.

Stalin

இந்த சந்திப்புக்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம், "கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், அது நடக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது,  நாங்கள் குண்டுக்கட்டாக வெளியியேற்றப்பட்டோம். எம்எல்ஏ-க்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக. 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.  ஆட்சியே குதிரை பேரத்தில்தான் நடந்து வருகிறது.

வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச அனுமதி கிடைக்கவில்லை. சபாநாயகரிடமும் வீடியோ ஆதாரத்தை வழங்கினோம். ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவில்லை.இதுதொடர்பாக ஆளுநரிடம் விரிவான விளக்கம் அளித்துள்ளோம். எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளோம்.

குறிப்பாக, ஆளுநரிடம் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி உள்ளோம்.  சட்டமன்றத்தில், மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளோம். இம்முறை ரகசியமான முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சட்டப்படி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம்தான், ஜனநாயகம் காக்கப்படும். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தி.மு.க அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close